இளம் வாக்காளர் விழிப்புணர்வு முகாம். மாணவிகள் பங்கேற்பு.

இளம் வாக்காளர் விழிப்புணர்வு முகாம். மாணவிகள் பங்கேற்பு.
இளம் வாக்காளர் முகாம்
கன்னியாகுமரியில் நடந்த இளம் வாக்காளர் விழிப்புணர்வு முகாமில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 01.01.2024ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருவதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்பதற்கான விழிப்புணர்வு முகாம் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நடந்தது.

மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, இளம் வாக்காளர்களை அதிக அளவில் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில், மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 18 வயது நிரம்பி. 19 வயதுக்குட்பட்ட மாணவிகளிடம் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான படிவங்கள் பெறப்பட்டது.

இந்நிகழ்வில் வாக்காளர் பதிவு அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் கண்ணன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) , கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story