மின்வாரியத்தின் அலட்சியத்தால் கால்களை இழந்த வாலிபர்: ஆட்சியரிடம் மனு

மின்வாரியத்தின் அலட்சியத்தால் கால்களை இழந்த வாலிபர்: ஆட்சியரிடம் மனு

பாதிக்கப்பட்ட வாலிபர்

விழுப்புரம் அருகே சோகம் மின்வாரியத்தின் அலட்சியத்தால் கால்களை இழந்த வாலிபர் ஆட்சியரிடம் மனு அளித்தார்.

விழுப்புரம் அருகே உள்ள சோழாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பூபாலன் (வயது 19). ஐ.டி.ஐ. முடித்துள்ள இவர், கடந்த டிசம்பர் மாதம் 17-ந் தேதி தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையா டிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள அரசு பள்ளியின் மொட்டை மாடியில் விழுந்த பந்தை எடுக்க முயன்றபோது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் படு காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பூபாலனின் இருகால்களும் முழங்காலுக்கு கீழ் அகற்றப்பட்டன.

மின்வாரியத்து றையினரின் அலட்சியப்போக்கால் இந்த விபத்து ஏற்பட்டதாக பூபா லனின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் கடுமையாக குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் பூபாலன் தனது பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.

அம்மனுவில், மின்வாரியத்துறையினர் அலட்சியப்போக்குடன் இருந்ததால் நான் எனது 2 கால்களையும் இழந்துள்ளேன். ஐ.டி.ஐ. முடித்துள்ள எனக்கு அரசு வேலை, இழப்பீட்டுத்தொகை, செயற்கை கால், வீட்டில் கழிவறை வசதி, மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் ஆகியவற்றை வழங்கி உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியிருந்தார்.

மனுவைப்பெற்ற மாவட்ட கலெக்டர் சி.பழனி, இதுகுறித்து உடனடி யாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story