ஆடு மேய்க்கும் தொழிலாளியை தாக்கிய வாலிபர்கள் 2 பேர் கைது
தென்காசி மாவட்டத்தில் ஆடுமேய்க்கும் தொழிலாளியை தாக்கியவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மேல நீலிதநல்லூரைச் சேர்ந்தவர் வேலு மகன் சுப்புராஜ் வயது 48. சுப்புராஜ் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார், இந்நிலையில் குடிபோதையில் சுப்புராஜை அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (26) வேல்முருகன் (27) ஆகிய இருவரும் சராசரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுப்புராஜ் பனவடலிசத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக், வேல்முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story