நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது

ஆன்லைன் சூதாட பல்வேறு பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் மதிக்கோன்பாளையம் காவல் துறையினர் வழக்கம் போல் இருசக்கர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரு இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் வாகன தணிக்கையில் நிறுத்திய போது, அவர்கள் நிறுத்தாமல் அதிவேகமாக சென்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவர்களை பின் தொடர்ந்து தருமபுரி அருகே சுற்றி வளைத்து பிடித்தனர்.இதனை தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது, இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் இரண்டு இளைஞர்களையும் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இருவரும தருமபுரி பகுதியைச் சார்ந்த ராஜா, வேடியப்பன் என்பது தெரியவந்தது. இந்த இருவரும் ஆன்லைன் ரம்மி விளையாடு பழக்கம் வைத்திருந்து, அதில் இலட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாகவும், அதற்காக வீட்டில் இருந்த நகைகளையும் அடகு வைத்து, ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்ததாகவும் தெரியவந்தது. இதனை எடுத்து பண தேவைகள் மற்றும் ஆன்லைன் விளையாடுவதற்காக பல்வேறு இடங்களில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு, இருசக்கர வாகனங்களில் சென்று சாலையில், நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் வரும், பெண்கள், முதியோர் என பலரிடம் செயின் பெரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இத்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்மேடு பகுதியில் பெண் ஒருவரிடம் 6 அரை சவரன் தங்க சங்கிலி பறித்து சென்றதும், விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தொடர் செயின் பொறுப்பு சம்பவத்தில் வேடியப்பன் மற்றும் ராஜா இருவரையும் மதிக்கோன்பாளையம் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 25 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Tags

Next Story