ஆத்தூரில் பயணிகள் நிழற்கூடத்தை வண்ணம் தீட்டி அழகுப்படுத்திய இளைஞர்கள்

ஆத்தூரில் பயணிகள் நிழற்கூடத்தை வண்ணம் தீட்டி அழகுப்படுத்திய இளைஞர்கள்

வண்ணம் தீட்டப்பட்ட பயணிகள் நிழலகம் 

ஆத்தூர் மந்தைவெளியில் அமைந்துள்ள அசுத்தமான பழுதடைந்த பயணிகள் நிழற்கூடத்தை வண்ணம் தீட்டி சட்ட மாமேதை படம் வரைந்து கலர் வண்ணம் தீட்டி அழகு படுத்திய இளைஞர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட மந்தைவெளி பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி வழியாக பைத்தூர், கடம்பூர், கூலமேடு உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது.

மந்தைவெளி பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள நிழற்கூடத்தில் குப்பை கூலமாகவும், இரவு நேரத்தில் மது பிரியர்களின் கூடாரமாகவும் திறந்தவெளியில் மது அருந்தி வந்துள்ளனர்.

மேலும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் வெளியில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து நிழற்கூடத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பேருந்து நிறுத்த நிழற்கூடத்தை தூய்மைப்படுத்தி கலர் வண்ணங்கள் தீட்டும் முயற்சியில் இறங்கினர்.

நிழற்கூட உட்பகுதியில் புத்தர் மற்றும் சட்ட மேதை அம்பேத்கர் உள்ளிட்டோர் புகைப்படங்களை வரைந்தனர் மேலும் உள் மற்றும் வெளிப்பகுதியில் வண்ண வண்ண கலர்களால் அழகு படுத்தியுள்ளனர். இளைஞர்களின் இச்செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story