டெல்லியில் கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ்ஜெரால்ட்: நீதிபதி முன் ஆஜர்
பெலிக்ஸ்
தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கர்களை தவறாக பேசிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அடைக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வந்த போது சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த பெலிக்ஸ்ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்ததை அடுத்து 10ம்தேதி இரவு டெல்லியில் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரை ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டார். அவர் மீது பெண்களை இழிவு படுத்துதல், ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மாவட்ட கூடுதல் நீதிபதி ஜெயசுதா முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.