நாமக்கல்லில் யுகாதி பெருவிழா கோலாகலம்!

நாமக்கல்லில் நடந்த யுகாதி பெருவிழா கொண்டாட்டத்தில் பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சார்பில் வருகிற யுகாதி என்கிற தெலுங்கு வருடப் பிறப்பு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்ட நாயுடு நல சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும், யுகாதி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு யுகாதி என்கிற தெலுங்கு வருடப் பிறப்பு 26 ஆம் ஆண்டு விழாவாக நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள SPS திருமண மண்டபத்தில் காலை 7 மணிக்கு யுகாதி விழா துவங்கியது , தொடர்ந்து மணமாலை நிகழ்ச்சி நடைபெற்றது சுமார் 700 மணமகன், மணமகள் ஜாதகங்கள் பரிவர்த்தனை நடைபெற்றது. மாலை 3 மணி முதல் ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, மாறுவேடப்போட்டி, பாட்டுப் போட்டி, நடனப்போட்டி மற்றும் மகளிருக்கான கோலப் போட்டியும் நடைபெற்றது. தொடர்ந்து, சென்ற கல்வியாண்டில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு ஆகியவற்றில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் இருந்து நாயுடு சமூக பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்க தலைவர் ஆடிட்டர் வெங்கடசுப்ரமணியன். செயலாளர் நாராயாணன்பலர் செய்தனர்.

Tags

Next Story