பழைய பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் அமைப்பு !

திருச்சி ஜங்ஷன் அருகேயுள்ள பழைய பாலத்துக்குப் பதிலாக ரூ. 16 கோடியில் புதிய பாலம் அமைக்கும் பணிகளுக்கு அமைச்சா் கே.என். நேரு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே இருந்த ரயில்வே பாலம் மிகவும் குறுகலாக இருந்ததால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும் பாலம் மிக பழையதாகவும் இருந்ததால் அதை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ. 168.34 கோடி நிதியில் ரயில்வே துறையுடன் இணைந்து இரு கட்டங்களாக பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டப்பணிகள் அரிஸ்டோ ரவுன்டானாவுடன் இணைந்து கிராப்பட்டி, கருமண்டபம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது. இது கடந்தாண்டு மே 29ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதைத் தொடா்ந்து, 2ஆம் கட்டப் பாலப் பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 16 கோடியில் இதற்கான திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். இப்பாலம் 770 மீட்டா் நீளம் 13.50 மீட்டா் அகலத்தில் நடை பாதையுடன், மன்னாா்புரம் பகுதி, ஜங்ஷன் பகுதி மற்றும் அரிஸ்டோ பகுதிகளை இணைக்கும் வகையில் 3 வழிகளுடன் அமைக்கப்படவுள்ளது. 15 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags

Next Story