கொடநாடு சம்பவத்தில் தடயம் அழிக்கப்பட்டதா? டிடிவி தினகரன்

"மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் உள்ளது ஈபிஎஸ் அணியினர் தான்" - டிடிவி

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொடநாடு சம்பவம் தொடர்பான தடயங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

எங்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா, ஓ.பன்னீர் செல்வத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டியது எடப்பாடி பழனிச்சாமிதான் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் "எனக்கும், சசிகலாவுக்கும், ஓபிஎஸ்க்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும். மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் தான் உள்ளனர். கோடநாடு வழக்கில் மடியில் மனம் இருக்கிறது, அதனால்தான் எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார். இபிஎஸ் ஆட்சியில் கொடநாடு சம்பவம் தொடர்பான தடயங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. உண்மையான குற்றவாளிகளை அரசு தண்டிக்க வேண்டும்.

DMK Files 2-ஐ அதிக ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். கூட்டணி இல்லை என்றாலும் தனித்துப் போட்டியிடுவதற்கு தயாராக உள்ளோம். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை என்றார்.

Tags

Next Story