பாவை பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

பாவை  கல்லூரி
X

பாவை கல்லூரி

பாவை கல்வி நிறுவனங்களில் முதலாமாண்டு பயிலும் பொறியியல் மாணவர்களுக்கு புத்தாக்கப்பயிற்சிகள் நடைபெறுகிறது. விழா மாணவிகளின் இறைவணக்கத்துடன் தொடங்கியது.விழாவிற்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை தாங்கினார். பாவை பொறியியல்கல்லூரி முதலாமாண்டு கணினி பொறியியல் மாணவி செல்வி எ.ஜெய்ஸ்னு தேவி வரவேற்றார்.

பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் குத்துவிளக்கேற்றி விழாவினை சிறப்பித்தார்.பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமையுரை ஆற்றினார். அவர் தம் உரையில் மாணவர்களாகிய உங்களுக்கு இக்கல்லூரிச் சூழல் புதியதாக தோன்றினாலும், நமது பாவை கல்வி நிறுவனம் உங்களை முழுமையான அக்கறையுடன், நேர்த்தியான பாதையில் வழிநடத்தி, உங்களின் முன்னேற்றப் பாதைக்காக உங்களுடனேயே பயணிக்கும். ஒரு நாற்றங்காலிருந்து பயிரினை எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு அதனை சரியாக வளர்ப்பது போல இளந்தளிர்களாகிய உங்களை பாவை கல்வி நிறுவனமும் விருட்சமாக உருவாக்கும். இப்புத்தாக்கப் பயிற்சியானது நீங்கள் யார் என்பதை உணர்ந்து உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் நீங்களே என்ற உண்மையை தெளிவுப்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் பயிற்சியளிக்கப்படுகிறது.மேலும் கல்லூரி வாழ்க்கை, நீங்கள் எந்த எந்த செயல்களில் அக்கறை செலுத்த வேண்டும், எதில் ஆர்வமுடன் செயல்பட வேண்டும் போன்றவைகள் பற்றிய தெளிவினை வழங்கும். மேலும் உங்கள் திறமைகளை, தைரியத்துடன் வெளிப்படுத்துவதற்கு உத்வேகமாகமாகவும் அமையும். உங்கள் கல்வியிலும், வாழ்விலும் இலக்குகள் உங்களை நெறிப்படுத்துகின்றன. உங்கள் இலக்குகளும், அதில் வெற்றி பெற நீங்கள் கடந்து செல்லும் பிரச்சனைகளும், தடைகளும், வாழ்வின் மேன்மைகளை நீங்கள் உணர்ந்து தடைகளை தாண்டி முன்னேற உங்களை பக்குவப்படுத்தும். உங்களிடம் என்ன உள்ளதோ அவற்றினைக் கொண்டு உங்களை தகவமைத்துக் கொள்ளுங்கள்.சிறிய, சிறிய செயல்களில் கூட ஒழுக்கத்தினையும், நேர்த்தியினையும் கடைபிடியுங்கள். நீங்கள் எப்படிப்பட்ட பின்னணியில் இருந்தாலும் அவைகளை பொருட்படுத்தாமல் சாதனையாளர்களின் பட்டியலில் நீங்கள் இடம் பெற வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுங்கள். உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்று பேசினார்.தொடர்ந்து பாவை பொறியியல் கல்லூரி முதலாமாண்டு கணினி பொறியியல் மாணவர் செல்வன் எ.எஸ்.ரித்தீஸ் புத்தாக்கப் பயிற்சியின் முன்னுரை வழங்கினார். இப்புத்தாக்கப் பயிற்சியில் பாவையின் கலாச்சாரம், புதிய சூழ்நிலைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளுதல், தொடர்பு திறன்கள், மென் திறன்கள், உன்னை அறிந்தால், தேர்வுகளை அணுகும் முறை போன்ற பல தலைப்புகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.

இவ்விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் முனைவர் கே.கே.இராமசாமி,பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story