ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டூரிஸ்ட் வாகனம் பொன் பாடி சோதனைச் சாவடியில் பறிமுதல்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டூரிஸ்ட் வாகனம் பொன் பாடி சோதனைச் சாவடியில் பறிமுதல்

போலி நம்பர் பிளேட்டுடன் பிடிபட்ட வாகனம் 

பொன் பாடி சோதனை சாவடியில் ஆந்திர மாநில அரசு வாகனம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டும், போலி நம்பர் பிளேட்டை பயன்படுத்தி இயக்கப்பட்ட, ஆந்திர மாநில டூரிஸ்ட் வாகனம் பறிமுதல்



தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் திருத்தணி அருகே அமைந்துள்ள பொன் பாடி போக்குவரத்து சோதனை சாவடியில் இணைப் போக்குவரத்து ஆணையர் எம். கே.சுரேஷ்குமார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் மாதவன் ஆகியோரது உத்தரவின்படிவாகன சோதனையில் ஈடுபட்டனர் . அப்போது காவல்துறையினர் பயன்படுத்தும் அவசரகால ஹாரனை ஒலித்த படி, ஆந்திர மாநில அரசு வாகனம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டும், போலி நம்பர் பிளேட்டை பயன்படுத்தி இயக்கப்பட்ட, ஆந்திர மாநில டூரிஸ்ட் வாகனத்தினை, தடுத்து நிறுத்தி, ஆவணங்களை ஆய்வு செய்தனர். அந்த சோதனையில் தமிழ்நாடு மாநில வரி செலுத்தாமல் இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. பின்னர் வாகன உரிமையாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்ததில், தமிழக அரசின் அனுமதி சீட்டு பெறாமல் இருப்பதற்கும், தமிழக அரசுக்கு வரி செலுத்தாமல் இருப்பதற்காகவும் இவ்வாறு இயக்கப்படுவது கண்டறியப்பட்டதன் அடிப்படையில் , மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன் டூரிஸ்ட் வாகனத்தை பறிமுதல் செய்து திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

Tags

Next Story