வாகன விபத்தில் காயமடைந்த சாம்சங் நிறுவன தொழிலாளர்கள்

வாகன விபத்தில் காயமடைந்த சாம்சங் நிறுவன தொழிலாளர்கள்

சாம்சங் ஆலை தொழிலாளர்கள் வந்த வாகனம்

போலீசாரின் கெடுபிடியே விபத்துக்கு காரணம் என கூறி தொழிலாளர்கள் போலீசருடன் வாக்குவாதம்

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.

இவர்கள் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் தொழிற்சங்கம் அங்கீகாரம் போனஸ் ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 25 நாட்களுக்கும் மேலாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை 6 முறை நடைபெற்ற பேச்சு வார்த்தை உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது.

நேற்று முதலமைச்சர் அறிவுறுத்தியத்தின் பெயரில் அமைச்சர்கள் டி. ஆர்.பி ராஜா, தா.மோ. அன்பரசன், சி. வீ. கணேசன் ஆகியோர் தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து இன்று 26 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட போராட்ட பந்தலுக்கு தொழிலாளர்கள் இருசக்கர வாகனத்திலும் நடந்தும் வர தொடங்கினர்.

அப்போது சுங்குவார்சத்திரம் மேம்பாலம் அருகே போலீசார் வாகன தணிக்கைகள் ஈடுபட்டு, தொழிலாளர்கள் மடக்கி, சோதனை செய்தனர், மேலும் அவர்களின் அடையாள அட்டையை புகைப்படம் எடுத்துக் கொண்டு, போராட்ட பந்தலுக்கு அனுமதித்து வந்தனர்.

போலீஸாரின் இந்த கெடுபடியால் தொழிலாளர்கள் பலரும் போராட்ட பந்தலுக்கு வர தயக்கம் காட்டினர்.

இந்த நிலையில் சுங்குவார்சத்திரத்தில் இருந்து வாலாஜாபாத் நோக்கி வந்த மினி லோடு வாகனத்தில், தொழிலாளர்கள் லிப்ட்டு கேட்டு பயணம் செய்துள்ளனர், அப்போது சிறுமாங்காடு அருகே வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணம் செய்த ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.




இது குறித்து தகவல் அறிந்து சென்ற தொழிலாளர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர் அப்போது சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடன் , விபத்து நடந்ததற்கு போலீசாரின் கெடுபிடி தான் காரணம் என புகார் தெரிவித்து போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் தொழிலாளர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story