100 பெண் குழந்தைகளுக்கு தலா ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்திய டாக்டர்

X
வங்கி கணக்கில் பணம் செலுத்திய டாக்டர்
குமாரபாளையம் தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் 100 பெண் குழந்தைகளுக்கு தலா ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தினார்.
குமாரபாளையம் கிழக்கு காலனியில் ஜோ மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் நடராஜன். இவர் பல வருடங்களாக பலருக்கு தன்னால் ஆன உதவிகளை மாணவ, மாணவியர்களுக்கு செய்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக 100 பெண் குழந்தைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய், செல்வமகள் திட்டத்தில் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தி வாழ்த்தினார். இதற்கான விழாவில் நகர தி.மு.க. செயலர் செல்வம், துணை செயலர் ரவி, மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, உஷா உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
