திருச்செங்கோட்டில் கர்மவீரர் காமராஜர் 121 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

திருச்செங்கோடு ஒன்றியம் மொளசி அண்ணா நகர் வார்டு உறுப்பினர் சி.சந்திரன் ஏற்பாட்டில் கர்மவீரர் காமராஜர் 121 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ராஜமாணிக்கம் கலந்து கொண்டு கர்மவீரர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி, நோட் புத்தகங்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story