கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 3500 மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 3500 மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்

மரக்கன்றுகள் நடும் திட்டம்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றியம் பொட்டணம் ஊராட்சியில் நம்ம நாமக்கல் பசுமை நாமக்கல் திட்டத்தில் 3500 தீவன மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி துவக்க விழா நடைபெற்றது.

தீவன மரக்கன்று நடும் விழாவிற்கு நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் எம் நடராஜன் தலைமை தாங்கினார். பொட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் நாமக்கல் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மரு. மருதுபாண்டி, பசுமை தமிழகம் இயக்கம் நாமக்கல் மாவட்ட தொடர்பு அலுவலர் சி.ஆர்.இராஜேஸ்கண்ணன், சேந்தமங்கலம் ஒன்றிய கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தில்குமார், முத்துகுமார், தனலட்சுமி, சரஸ்வதி, சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், பொட்டணம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மேய்க்கல் நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

Tags

Next Story