தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் 700 விநாயகர் சிலைகள் கரைப்பு

தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் 700 விநாயகர் சிலைகள் கரைப்பு

விநாயகர் சிலைகள் கரைப்பு

சேலம் மாவட்டம் தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூன்றாவது நாளாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழிபாடு செய்யப்பட்ட 700 விநாயகர் சிலைகள் கரைத்தனர்.

சேலம் மாவட்டம் தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூன்றாவது நாளாக சேலம், திருச்செங்கோடு, சங்ககிரி,எடப்பாடி, இளம்பிள்ளை,சீரகாபாடி, கொங்கணாபுரம், ஜலகண்டாபுரம், மகுடஞ்சாவடி, வைகுந்தம், தேவூர், கொண்டலாம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை லாரி டெம்போவில் பெண்கள், இளைஞர்கள் சிறுவர் சிறுமிகள் என குடும்பத்துடன் நண்பர்களுடன் ஆர்வத்துடன் மேளதாளம் முழங்க அதிகாலை முதலே கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரைக்கு விநாயகர் சிலைகள் கொண்டு சென்று கரைத்துள்ளனர், இதனையடுத்து மதியம் முதல் இரவு வரை கூட்டம் அதிகரித்ததால் கொட்டாயூரில் இருந்து கல்வடங்கம் வரை சுமார் சுமார் 1கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது இதனால் மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.

இதனையடுத்து சங்ககிரி டிஎஸ்பி ராஜா தலைமையில் சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி, தேவூர் சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் 30க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story