மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிய அரசு பள்ளி மாணவர்

மீண்டும் வெளியேறிய மாணவன்
குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவர் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார்.
குமாரபாளையம் காவேரி நகரில் வசிப்பவர் பிரியா, 37. தறி கூலி. இவரது மூத்த மகன் ராகுலன், 16, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பும், இளைய மகன் சிவானந்தன், 11, நகராட்சி பள்ளியில் ஏழாம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இருவரும் சரியாக படிக்காததால், இவரது அம்மா பிரியா அடிக்கடி திட்டுவது வழக்கம் என கூறப்படுகிறது. இதனால் மூத்த மகன் ராகுலன், ஆக. 25ல், வீட்டை விட்டு வெளியேறி, ஒரு வாரம் கழித்து செப். 3ல் வீட்டிற்கு வந்தார். எங்கு போனாய்? என்று கேட்க அவர் எதுவும் சொல்லவில்லை. இந்நிலையில் செப். 7 மாலை 05:00 மணியளவில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது ராகுலன் இல்லாதது கண்டு, இளைய மகன் வசம் கேட்ட போது, அவன் 04:00 மணிக்கே வெளியில் சென்று விட்டதாக கூறினான். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒரு மொபைல் போனிலிருந்து வந்த குறுந்தகவலில், நான் வீட்டை விட்டு வெளியே போகிறேன், என்னை தேட வேண்டாம், என குறிப்பிட்டிருந்தது. மகனை கண்டுபிடித்து தருமாறு பிரியா குமாரபாளையம் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். இதன்படி போலீசார் ராகுலனை தேடி வருகின்றனர்.
