கவிஞர் நிறைமதிக்கு நினைவஞ்சலி கூட்டம்

கவிஞர் நிறைமதிக்கு நினைவஞ்சலி கூட்டம்

 நினைவஞ்சலி கூட்டம்

குமாரபாளையம் கவிஞர் நிறைமதிக்கு நினைவஞ்சலி கூட்டம் நடந்தது.

குமாரபாளையம் நிறைமதி கவிஞர், நாடக ஆசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், என பன்முகம் கொண்டவர். இவர் சில நாட்கள் முன்பு மறைந்தார். இவருக்கு குமாரபாளையம் மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூண் முன்பு நினைவஞ்சலி கூட்டம் வக்கீல் மோகன் தலைமையில் நடந்தது. இதில் தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள், பட்டிமன்ற பேச்சாளர்கள், பொதுநல ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், என பலதரபட்ட நபர்கள் பங்கேற்று நிறைமதியின் தமிழ் சேவை குறித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அன்பழகன், பகலவன், விடியல் பிரகாஷ், ரவி, சித்ரா, ஆறுமுகம், ஜானகிராமன், சுப்ரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story