மோகனூர் சர்க்கரை ஆலை என பெயர் மாற்றம் செய்யக் கோரி பேரவைக் கூட்டத்தில் தீர்மானம்

மோகனூர் சர்க்கரை ஆலை என பெயர் மாற்றம் செய்யக் கோரி பேரவைக் கூட்டத்தில் தீர்மானம்
X

 பேரவைக் கூட்டத்தில் தீர்மானம்

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை என்பதை, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என, ஆலைப் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின், 2015–16 முதல், 2021–22ம் ஆண்டு வரையான பொது பேரவைக் கூட்டம், ஆலையில் உள்ள அண்ணா கலையரங்கில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமை தாங்கினார். சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் மல்லிகா ஆண்டறிக்கை வாசித்தார்.

கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து, ஏற்கனவே ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக இருந்த போது துவக்கப்பட்ட, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை என்பதை, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். ஆலைக்கு தமிழ்நாடு அரசின் வழிவகை கடனாக உள்ள ரூ. 32.60 கோடி ரூபாயை, அரசின் பங்கு தொகையாக மாற்றம் செய்ய வேண்டும்.

2022–-23 ஆம் ஆண்டு நடவு பருவத்திற்கு, கரும்பு நடவு செய்யும் அங்கத்தினர்களை ஊக்குவிக்கும் வகையில், ஆலை அங்கத்தினர்களுக்கு விதைக்கரணை மானியமாகவோ, ரொக்கமாகவோ அல்லது கரணையாகவோ, ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 8,500 அல்லது 20 ஆயிரம் கரணைகள் வழங்க வேண்டும். கரும்பு வெட்டும் ஆட்களுக்கு, பணி நேரத்தின் போது ஏதாவது விபத்து ஏற்பட்டால், ரூ. 1 லட்சம் முதல், 3 லட்சம் வரை விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையை, ஆலையில் இருந்து செலுத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஆலையில் பணிபணிபுரிந்து, பணியில் இருக்கும் போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் தகுதி வாய்ந்த, 38 வாரிசுதாரர்களுக்கு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் ஆலையின் நிர்வாகக்குழு தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய திமுக செயலாளர் நவலடி, விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட திரளான கரும்பு விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story