75 வது பிறந்த நாள் கொண்டாடிய காங்கிரஸ் மூத்த தலைவர்.

75 வது பிறந்த நாள் கொண்டாடிய காங்கிரஸ் மூத்த தலைவர்.

75 வது பிறந்த நாள்

குமாரபாளையத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (75). இவருக்கு காங்கிரஸ் மீது மிகுந்த பக்தி. அதனால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றி வந்தார். தற்போது நகர காங்கிரஸ் கமிட்டி துணை தலைவராக பணியாற்றி வருகிறார்.

தென்னிந்திய அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களின் அவசர உதவி நலச் சங்கத்தின் கவுரவ தலைவர், மனித உரிமைகள் கழக நாமக்கல் மாவட்ட முதல் அமைப்பாளர். நாமக்கல் மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர் உரிமையாளர் சங்கத்தின் தலைவர், குமாரபாளையம் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலம் நாடும் சங்கத்தின் 45 ஆண்டு கால நிரந்தர தலைவர் ஆகிய பதவிகளை வகித்து சேவையாற்றி வருகிறார். இவரது 75 வது பிறந்த நாள் விழா பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சக வாகன ஓட்டுனர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.

தி.மு.க. நகர செயலர்கள் செல்வம், ஞானசேகரன் உள்பட நிர்வாகிகள் பலரும் நேரில் பாராட்டினர். இது குறித்து சிவகுமார் கூறியதாவது:

தொடர்ந்து பல ஆண்டுகளாக ஓட்டுனர் சங்க தலைவராக நான் இருந்து வருகிறேன். அரசியல்வாதி என்று என்னை யாரும் அப்படி பிரித்து பார்க்காமல் யாவரும் ஒன்றே, என்றே வாழ்ந்து வருகிறேன். கொரோனா காலங்களில் சுற்றுலா வாகன ஓட்டுனர் நிலை, தடுமாறியது. இயன்ற வரை அவர்களுக்கு என்னால் ஆன உதவிகள் செய்து கொடுத்தேன். தொடர்ந்து எனக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளில் மிகவும் நேர்மையுடன் நடந்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story