காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு

காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு

ஆடி 1 மற்றும் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள், அடிசேங்கள் நடந்தது.

சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நேற்று ஆடி 1 மற்றும் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, மூலவர் சிறப்பு தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பல்வேறு மூலிகை திரவியங்களைக் கொண்டு, அபிஷேகங்கள் நடந்தது. கோவில் உட்பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் அருள் பாலித்தார்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், வையப்பமலை புதூர் புடவைகாரியம்மன், வீரகாரன் கோவிலிலும், சித்தாளந்தூர் திருவேங்கட பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்..

Tags

Next Story