கல்விச் சேவை புரியும் ஏ.கே.பி சின்ராஜ் எம்.பி-நன்றி தெரிவித்த மக்கள்

கல்விச் சேவை புரியும் ஏ.கே.பி சின்ராஜ் எம்.பி-நன்றி தெரிவித்த மக்கள்

ஏ.கே.பி சின்ராஜ் எம்.பி

பழங்குடியின மாணவ, மாணவியரை வழிகாட்டுதல் வகுப்பிற்கு இலவசமாக அழைத்துச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இயங்கும் பழங்குடியினர் உண்டு, உறைவிட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் 2022 - 23ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் நூறு சதம் தேர்ச்சி விழுக்காடு தந்த பள்ளி தலைமை ஆசிரியர் பாட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு உயர் கல்வி தொடர்பான வழிகாட்டும் நிகழ்ச்சி சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாப்பட்டி ஹோலி கிராஸ் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

உடையாப்பட்டியில் நடந்த பாராட்டு விழா மற்றும் வழிகாட்டும் நிகழ்ச்சிக்கு நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், கொல்லிமலை சார்ந்த 300 க்கும் மேற்பட்ட பழங்குடியின பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை தனது சொந்த செலவில் 5 பேருந்துகளில் அழைத்து வந்து கருத்தரங்கில் பங்கேற்க வைத்து, மீண்டும் கொல்லிமலை சேரும் வரையிலான அனைத்து செலவினங்களையும் செய்து கொடுத்தார். இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என அனைவரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜுக்கு நன்றி தெரிவித்தனர்.

கல்விக்காக தனது சொந்த செலவில் பழங்குடியின மாணாக்கர்களை வழிகாட்டுதல் வகுப்பிற்கு அழைத்துச் சென்று அசத்திய நாடாளுமன்ற உறுப்பினரை நாமும் பாராட்டுவோம்.

Tags

Next Story