இன்று அனைத்து வணிக நிறுவனங்களும் செயல்படும் - ஜெயகுமார் வெள்ளையன் தகவல்

இன்று அனைத்து வணிக நிறுவனங்களும் செயல்படும் - ஜெயகுமார் வெள்ளையன் தகவல்
X

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு எனும் அமைப்பு சார்பில் இன்று 25/09/2023 திங்கட்கிழமை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள கடையடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பங்கு பெறவில்லை. இந்த கடையடைப்பு போராட்டம் தொடர்பாக எவ்வித அழைப்போ அல்லது அறிவிப்போ பேரமைப்பு சார்பில் எங்கும் வெளியிடப்படவில்லை. ஆகையால் இன்று வழக்கம் போல அனைத்து வணிக நிறுவனங்களும் செயல்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags

Next Story