பள்ளிபாளையம் ஒன்றியத்தில் மாற்றுக் கட்சியினர் மதுரா செந்தில் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

பள்ளிபாளையம் ஒன்றியத்தில் மாற்றுக் கட்சியினர்   மதுரா செந்தில் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

மதுரா செந்தில்

நாமக்கல் மேற்கு மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியத்தில் மாற்றுக் கட்சியினர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் ஏற்பாட்டில், பாரத ஹிந்த் பரிவார் அமைப்பின் மாநில தொழிலாளர் அணி துணைத் தலைவர் தலைமையில், கொக்கராயன்பேட்டை , புதுப்பாளையம், காடச்ச நல்லூர், ஓடப்பள்ளி, கோவிந்தம்பாளையம் பகுதிகளில் இருந்து 70 பெண்கள் உட்பட 250 பேர் மாவட்ட திமுக செயலாளர் S.M.மதுரா செந்தில் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி, மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் குமார், ஆலாம்பாளையம் பேரூர் கழக செயலாளர் கார்த்திராஜ், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் கார்த்திக்ராஜா, உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story