திருச்செங்கோட்டில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

திமுகவில் இணைந்தனர்
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நாமக்கல் மாவட்டம் அதிமுக, பா.ஜ.கவைச் சேர்ந்த மகளிர் அணியினர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அதிமுக நகர மகளிர் அணியினர் செல்வி, பழனியம்மாள், இந்திராணி, லலிதா, சாந்தி, ஹர்ஷினி, சரசா, வர்ஷினி, பா.ஜ.க மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் சரஸ்வதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அகிலாண்டேஸ்வரி, சந்தானலட்சுமி, மகாலட்சுமி ஆகியோர் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் அக்கட்சியில் இருந்து விலகி, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில், மாநில மகளிர் அணி சமூக வலைதள செயலாளர் திருநங்கை அ.ரியா, பொத்தனூர் பேரூர் கழக செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் சாந்தி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜோதி சக்திவேல், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ராதிகா சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
