ராசிபுரத்தில் அ.ம.மு.க ஆலோசனைக் கூட்டம்

ராசிபுரத்தில் அ.ம.மு.க ஆலோசனைக் கூட்டம்

அ.ம.மு.க ஆலோசனைக் கூட்டம்

ராசிபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் பங்கேற்பு

ராசிபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது: மாநில துணைப் பொதுச் செயலாளர் பங்கேற்பு.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.டிடிவி.தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து பகுதிகளும் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற வருகிறது. அதன்படி ராசிபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அலுவலகத்தில் நாமக்கல் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. சண்முகவேல், அவர்கள் தலைமையில் நாமக்கல் வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஏ.பி. பழனிவேல் அவர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் கழகப் பொதுச் செயலாளர் அவர்களை முக்கிய விசேஷங்கள், மற்றும் கழக நிர்வாகிகள் திருமணம், மாபெரும் பொதுக்கூட்டம் போன்ற இடங்களுக்கு அழைத்து கட்சியை சிறப்பாக வழிநடத்த மற்றும் செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றினர்.

மேலும் பல்வேறு கிராமங்களில் அடிப்படை வசதிகள், மற்றும் விலைவாசி உயர்வு போன்றவை கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்த முடிவு செய்தனர்.

கட்சியின் புதிய கொடிக்கம்பங்கள் அனைத்து பகுதிகளிலும் நிறுவ வேண்டும் எனவும் தீர்மானத்தில் எடுத்துக் கூறினர்.

தொடர்ந்து பல்வேறு மாற்று கட்சிகளிலிருந்து சிலர் விலகி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு நிர்வாகிகள் சால்வை அனைத்து வரவேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கரூர் மாவட்ட கழக செயலாளர் தங்கவேல், மாநில இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி. மேகலா, மாவட்ட அவைத் தலைவர் எஸ். பன்னீர்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் கா.முருகன், மாவட்ட இணை செயலாளர் பத்மாவதி, ராசிபுரம் நகரக் கழக செயலாளர் எஸ். வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள்,சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், என கட்சி நிர்வாகிகள் பலர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Next Story