ஒதுக்கப்பட்ட இடங்களில் விலங்குகள் வதை செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சியர் ச. உமா வலியுறுத்தல்

ஒதுக்கப்பட்ட இடங்களில் விலங்குகள் வதை செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சியர் ச. உமா வலியுறுத்தல்

மாவட்ட ஆட்சியர் ச. உமா

விலங்குகளை வதை செய்யும் கூடம் இருந்தும் சாலையோரங்களில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையிலும் போக்குவரத்துக்கு இடையுராகவும் விலங்குகளை வதை செய்யப்படுகின்றன. அவ்வாறு விலங்குகளை வதை செய்துவிட்டு சாலையோரங்களில் அதன் கழிவுகளை விட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் தெரு நாய்கள் அதை உண்பதற்காக கூட்டம் கூட்டமாக கூடி சண்டையிட்டு சாலையில் அங்கும் இங்கும் ஓடுகின்றன. இதனால் சாலையில் வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாவதுடன் வாகனங்களில் செல்பவர்களையும் நடந்து செல்பவர்களையும் கடித்து விடுகின்றன.

எனவே அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களில் தான் விலங்குகளை வதை செய்ய வேண்டும். இதை மீறி சாலையோரங்களில் வதை செய்யப்படும் நபர்கள் மீது அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்களை கொண்டு மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்க உதவி ஆய்வாளர், விலங்குகள் வதை தடுப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படுவர்.

விலங்குகளை வாகனத்தில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போது விலங்குகள் போக்குவரத்து சட்டம் விதிக்கு மாறாக கொண்டு செல்வதாக புகார் வந்துள்ளது. எனவே விலங்குகளை வாகனத்தில் கொண்டு செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய சட்ட விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

விலங்குகளின் நலன் காப்போம் விலங்குகளின் வளம் காப்போம் என்ற அடிப்படையில் வாகனத்தில் விலங்குகள் பயணிக்கும் போது 6 செ. மீ குறையாமல் வைக்கோல் அல்லது தேங்காய் நார் வாகனத்தில் பரப்பி விடவேண்டும், இரண்டு விலங்குகளுக்கு இடையே போதிய இடைவெளி விட்டு வாகனத்தில் ஏற்ற வேண்டும், விலங்குகளுக்கு தேவையான முதலுதவி மருந்து (பெட்டி) வாகனத்தில் வைத்திருக்க வேண்டும்.

விலங்குகளை வாகனத்தில் ஏற்றும் முன் அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவரிடம் விலங்குகள் வாகனத்தில் பயணிக்க உடல் தகுதியாக உள்ளதா என்பதை பரிசோதனை செய்து கால்நடை மருத்துவரிடம் சான்று பெற வேண்டும். (பரிசோதனை செய்த நேரத்தில் இருந்து 24 மணி நேரத்திற்கு மட்டுமே பொருந்தும்), வாகனத்தில் பயணிக்கும் ஒவ்வொரு விலங்குகளுக்கும் சிவப்பு நிறத்தில் தொடர் எண் எழுத வேண்டும்,

விலங்குகளை பரிசோதனை செய்த பின் வாகனத்தில் ஏற்றும் விலங்குகளை போட்டோ எடுத்து வாகனத்தில் பயணிக்கும் போது வைத்திருக்க வேண்டும், விலங்குகளை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் போது வாகன ஓட்டுநர் விலங்குகளை ஏற்றும் இடம், நேரம் மற்றும் இறக்கும் இடம் ( உத்தேசமான நேரம் ) (Trip Sheet) வைத்திருக்க வேண்டும், 6 மணி நேரத்திற்கு மேல் பயணம் மேற்கொள்ள வேண்டுமாயின் இடைவேளியில் நிறுத்தி தேவையான தீவனம் மற்றும் தண்ணீர் அளித்து பயணிக்க வேண்டும்

விங்குகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வாகனத்தில் பயணிக்கும் போது ஒரு விலங்குகளுக்கான இட ஒதுக்கீடானது 200 கிலோ வரை எடையுள்ள விலங்குகளுக்கு 1 சதுர மீட்டரும், 200 - 300 கிலோ வரை எடை யுள்ள விலங்குகளுக்கு 1.20 சதுர மீட்டரும், 300 - 400 கிலோ வரை எடையுள்ள விலங்குகளுக்கு 1.40 சதுர மீட்டரும், 400 கிலோவிற்கு மேல் எடையுள்ள விலங்குகளுக்கு 2 சதுர மீட்டரும் இட ஒதுக்கீடு இருத்தல் வேண்டும்.

மேற்கண்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டம் (56/1960) மற்றும் விலங்குகள் போக்குவரத்து சட்டம் (1978) ன் படி வழக்கு பதிவு செய்யப்படும். புகார் தெரிவிக்க மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்க உதவி ஆய்வாளர் எம்.தர்மராஜன், செல் – 9786053567 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story