போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

விழிப்புணர்வு உறுதிமொழி

த.விஜய்கண்ணன் பங்கேற்பு

தமிழ்நாடுஅரசு சார்பில் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு என்ற நோக்கத்தோடு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி சார்பில் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி, விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகர மன்ற தலைவர் த. விஜய்கண்ணன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் சரவணன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நகராட்சி அதிகாரிகள், அன்பு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் பெருமாள் ,கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம், தலைவர் சீனிவாசன் , துணை முதல்வர் மஞ்சுளா மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோர் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

Tags

Next Story