தொழில் மையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சியர் ச.உமா தகவல்

தொழில் மையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள்  வரவேற்பு   மாவட்ட ஆட்சியர் ச.உமா தகவல்

ஆட்சியர் ச.உமா தகவல் 

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படும் அரசு திட்டம். இத்திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம், மோகனுர், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஆகிய நான்கு வட்டாரங்களில் செயல்பட்டு வருகிறது. இவ்வட்டாரங்களில் உள்ள தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் மதி சிறகுகள் தொழில் மையம்' (MSTM) இயங்கி வருகிறது. மேற்கண்ட தொழில் மையத்தில் பணிபுரிய காலியாக உள்ள ஒரு பணியிடமான தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் (Enterprises Development Officer) ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதிகள்:

1. கணினி தேர்ச்சியுடன் ஏதாவதொரு முதுகலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

2. 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. வட்டார அளவில் (MSTM) செயல்பாடுகளை நிர்வாகிக்கும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

4. தொழில் முனைவோருக்கான திறன் தொகுப்பு பெற்றவராக இருத்தல் வேண்டும்.

5. ஊரக பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் நிதி நடவடிக்கைகள் பற்றி திறன் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

6. குறிப்படப்பட்டுள்ள தகுதி மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

7. ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் அனுபவமுள்ளவராக இருத்தல் வேண்டும்.

மேற்படி தகுதியுள்ள நபர்கள் 01.09.2023 காலை 10.00 மணி முதல் 09.09.2023 மாலை 5.00 மணி வரை கீழ்க்கண்ட முகவரியில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை என மாவட்ட ஆட்சித்தலைவH மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட செயல் அலுவலர்,

வாழ்ந்து காட்டுவோம் திட்டம்,

அறை எண் - 212, முதல் தளம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டடம்,

நாமக்கல் மாவட்டம் - 637003,

தொலைபேசி - 04286 290730

Tags

Next Story