"என்னை ஈர்த்த கலைஞர் லோகோ " வெளியீடு எஸ்.எம்.மதுரா செந்தில் வெளியிட்டார்

லோகோ வெளியீடு
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாமக்கல் மேற்கு மாவட்ட கழக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் கலைஞர் அவர்களின் சிறப்பை கொண்டாடும் வகையில் "என்னை ஈர்த்த கலைஞர் " என்ற தலைப்பில் வருடம் முழுவதும் வீடியோக்கள் வெளியிடப்பட உள்ளது.
ஒவ்வொரு துறையிலும் உள்ளவர்கள் கலைஞர் அவர்களால் எவ்வாறு கவரப்பட்டார்கள் என்பதை குறும்படமாக எடுத்து வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட உள்ளது. இது ஒரு புதுமை திட்டம் ஆகும்.
இதற்கான இலட்சணையை நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் வெளியிட்டு, தகவல் தொழில் நுட்ப அணியினரை பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கௌதம், துணை அமைப்பாளர்கள் தினேஷ்குமார், வடிவேல், பரசுராமன், தமிழ்தாரணி, சேக் மீரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
