கொல்லிமலை ஒன்றியத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்க, விற்பனை செய்ய தடை

பிளாஸ்டிக் பொருட்கள் தடை
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 2019 பிரிவு 13 இன்படி அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்கவும், பொது சுகாதாரகேடு ஏற்படுவதை தடுக்கவும் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் உபயோகிக்கவும், விற்பனை செய்யவும் தடை செய்ய தீர்மானித்துள்ளது.
1. அனைத்து தடிமனாலான பிளாஸ்டிக் பைகள்
2. ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் கப்புகள் (நெகிழி)
3. ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் டம்ளர்கள்
4. பிளாஸ்டிக் கரண்டிகள், கத்திகள்/முள்கரண்டிகள் (Fork)
5. பிளாஸ்டிக் உறிஞ்சும் குழல் (Straw)
6. காகித கப்புகள்
7. காகித டம்ளர்கள்
8. பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள்
9. ஸ்டைலோஃபோம் / தெர்மகோல் தட்டுகள் மற்றும் பிறவகை தெர்மகோல்
10. நெய்யப்படாத வகையிலான பைகள் (PP-Non-Woven), படுக்கை விரிப்புகள் மற்றும் சமையலர் தொப்பிகள்
11. பிளாஸ்டிக் கையுறைகள்
12. பிளாஸ்டிக் குடிநீர் பாக்கெட்டுகள்
13. சில்வர் பூச்சு கொண்ட பைகள்
14. பிளாஸ்டிக் பேக்கிங் செய்யப்படும் பொருட்கள்
15. பூச்செண்டுகள் மற்றும் பரிசு பொருட்கள் சுற்றப் பயன்படும் பிளாஸ்டிக்குகள்
16. லாமினேஷன் செய்யப்பட்ட காக்கி தாள்கள்
17. லாமிகேஷன் செய்யப்பட்ட பேக்கரி அட்டை பெட்டிகள்
18. பிளாஸ்டிக் வாழை இலை வடிவ தாள்கள்
19. பிளாஸ்டிக் தோரணங்கள்
எனவே, இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பின்வருமாறு அபராதம் வசூல் செய்யப்படும். இந்த தடை உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.
வ.எண் பிளாஸ்டிக் பயன்படுத்தும் விதம் முதல் முறை இரண்டாம் முறை மூன்றாம் முறை
1 . ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தல் 25,000 50,000 1 லட்சம்
2 . வணிக வளாகங்கள், ஜவுளி கடைகள் மற்றும் பெரிய வணிக வளாகங்களில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மற்றும் விநியோகம் 10,000 15,000 25,000
3 . மளிகைக் கடைகள் மற்றும் மருந்துக் கடைகள் போன்ற நடுத்தர வணிக நிறுவனங்களில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மற்றும் விநியோகம் 1,000 2,000 5,000
4. சிறு வணிக விற்பனையாளர்களால் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மற்றும் விநியோகம் 100 200 500
