வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
குமாரபாளையத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வங்கி ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது.
வங்கிகள் தேசியமயமான ஜூலை 19ல் பிரச்சார பயணம் துவங்கி சென்னை, ஓசூர், கோவை மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து பிரச்சார பயணம் துவங்கி மாநிலம் முழுதும் நடந்து வருகிறது. ஜூலை 22ல் திருச்சியில் நிறைவு பெறுகிறது. இதன் ஒரு கட்டமாக பிரச்சார பயண குழுவினர் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்தனர். பொதுத்துறை, கூட்டுறவு, கிராம வங்கிகள் பாதுகாக்கப்பட வேண்டும்; பலப்படுத்தப்பட வேண்டும்-, தனியார் வங்கிகளும் பொதுத்துறை வங்கிகளாக மாற்றப்பட வேண்டும், மேம்பட்ட வாடிக்கையாளர் சேவையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். குமாரபாளையம் சி.பி.எம் சார்பில் பாலுசாமி, பஞ்சாலை சண்முகம், மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிரணி செயலர் சித்ரா, உள்பட பலர் பங்கேற்றனர்.
