சாரணீய ஆசிரியைகளுக்கான அடிப்படைப் பயிற்சி முகாம்
பயிற்சி முகாம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சாரணீயர் பிரிவில் உள்ள முயல் குட்டிகள், நீலப் பறவையர், சாரணீயர், திரிசாரணீயர் படைகளை நடத்தும் பொறுப்பாசிரியர்களுக்கு மாநில அளவில் நடத்தப்படும் அடிப்படைப் பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 20 ந் தேதி முதல் 26 ந் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதன் துவக்க விழா விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்வி நிறுவன முதல்வர் முனைவர்.பேபி ஷகிலா அவர்களின் தலைமை தாங்கினார். விழாவில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளரும், நாமக்கல் மாவட்ட சாரண இயக்கத்தின் துணைத்தலைவருமான டாகடர்.மு.கருணாநிதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். முகாம் செயலாளர் து.விஜய் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 80 ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கான பயிற்சி முகாமினை தேசிய அளவிலான பயிற்றுநர்கள் சரஸ்வதி, மஞ்சுளா, ராதிகா திரிவேணி, மலர்விழி ஆகியோர் அடங்கிய குழு நடத்த உள்ளனர். இம்முகாம் சிறக்க நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், சாரண இயக்கத்தின் முதன்மை ஆணையருமான ப.மகேஸ்வரி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை கல்வி நிறுவன திரிசாரணீயர்கள் செய்திருந்தனர்