பசுந்தேயிலை தோட்டத்தில் குட்டி ஈன்ற காட்டெருமை

பசுந்தேயிலை தோட்டத்தில் குட்டி ஈன்ற காட்டெருமை

காட்டெருமை

பசுந்தேயிலை தோட்டத்தில் குட்டி ஈன்ற காட்டெருமையால் தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை.
நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து தூதூர்மட்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ள கேத்தி மற்றும் லவ்டேல் பகுதியில் அதிக அளவில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தேயிலை தோட்டத்திற்க்கு தினமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிக்றனர். இந்நிலையில் கேத்தி அருகே ஒரு தேயிலைத் தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் பணியாற்றிய போது 15-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தேயிலை தோட்டங்களுக்குள் நுழைந்தது. அவ்வாறு நுழைந்த அந்தக் காட்டெருமை கூட்டத்தில்,இருந்த காட்டெருமை ஒன்று குட்டி ஈன்றது. இதனால் பாதுகாப்பு கருதி தோட்டத் தொழிலாளர்கள் யாரும் அப்பகுதிக்கு வேலைக்கு செல்லவில்லை. சுமார் மூன்று மணி நேரம் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்ட காட்டெருமைகள் பிறந்த குட்டியை அழைத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது . அதன் பின்னரே தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர்.

Tags

Next Story