தனியார் உணவத்தில் பர்கர் சப்பிட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதி
மருத்துவமனையில் அனுமதி
நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள ஐ வின்ஸ் என்ற அசைவ உணகத்தில் கடந்த 16 ம் தேதி சனிக்கிழமை ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி கலையரசி உயிழந்ததோடு இந்த உணவகத்தில் சாப்பிட்ட சுமார் 43 பேர் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கெட்டுப்போன சிக்கன் இறச்சியை விற்பனை செய்த ஐ வின்ஸ் உணவக உரிமையாளர் நவீன்குமார் உட்பட 3 பேர் நாமக்கல் போலீசாரால் கைது செய்யப்பட்டு நாமக்கல் கிளைச்சிறையில் அடைத்தனர்.
இதை தொடர்ந்து நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள ஐவின்ஸ் உணவகத்திற்கு இறைச்சிகளை சப்ளை செய்துவந்த நாமக்கல் ராமாவரம் புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் கோனார் கறிக்கோழி கடை உரிமையாளர் சீனிவாசனை கைது செய்த போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நாமக்கல் சேலம் சாலையில் இயங்கி வரும் மிஸ்டர்,பர்கர் என்ற தனியார் உணவகத்தில் நேற்று இரவு பர்கர் சாப்பிட்ட நாமக்கல் பூங்கா நகரை சேர்ந்த 18 வயது சிறுவன் சஞ்சய் வயிற்று போக்கு காரணமாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் எட்டு பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே தனியார் உணவகத்தில் சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்ததோடு 43 பேர் உடல் நலம் பாதிப்படைந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சிறுவன் பர்கர் சாப்பிட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் நாமக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.