வாய்க்காலில் தண்ணீர் திறப்பையொட்டி புதர்களுக்கு தீ வைப்பு

வாய்க்காலில் தண்ணீர் திறப்பையொட்டி புதர்களுக்கு தீ வைப்பு
X

புதர்களுக்கு தீ வைப்பு

குமாரபாளையம் அருகே வாய்க்காலில் தண்ணீர் திறப்பையொட்டி புதர்களுக்கு தீ வைக்கப்பட்டது.

காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்துக்காக சில நாட்கள் முன்பு முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் நீரை நம்பி குமாரபாளையம் அருகே சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. வழக்கமாக ஆண்டுதோறும் ஜூலை மாதம் இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் வாய்க்காலில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடுவார்கள். மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டு சுமார் ஆறு மாதங்கள் ஆனதால், வாய்க்காலின் நீர்வழிப்பாதையில் செடி,கொடிகள் உள்ளிட்ட புதர்கள் அடர்த்து வளர்ந்து உள்ளது. இவைகளை அகற்றினால்தான் தண்ணீர் எளிதில் செல்ல முடியும். தண்ணீர் திறந்து விடவிருப்பதால் இந்த புதர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் வாய்க்காலின் நீர்வழிப்பாதையில் அடர்ந்து வளர்ந்து இருந்த புதர்களை அகற்றும் பணி துவங்கி நடந்து வருகிறது. வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்ததின்படி, அதற்கான பணிகள் நடந்து வருவது கண்டு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

Next Story