கொல்லிமலையில் சந்துக்கடைகளில் மதுபானம் விற்பனை - 3 பேர் மீது வழக்குப்பதிவு

கொல்லிமலையில்  சந்துக்கடைகளில் மதுபானம் விற்பனை - 3 பேர் மீது வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு 

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டத்தில் கள்ளத்தனமாக மதுபானங்களை சந்துக்கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவருக்கு புகார் வரப்பெற்றதைத் தொடர்ந்து, மேற்படி பகுதியில் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணித்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அதன்பேரில், கொல்லிமலை வட்டத்தில் கடந்த 15.09.2023 அன்று மாவட்ட மேலாளர் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளருடன் கூட்டுத் தணிக்கை மேற்கொண்ட போது, சந்துக் கடைகளில் மதுபானங்களை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வதை கண்டறியப்பட்டு, சம்மந்தப்பட்ட 3 நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும், 25 மதுபான பாட்டில்களை கைப்பற்றியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, அரியூர் நாடு, மேல்கலிங்கம் என்ற இடத்தில் வெங்கடாசலம் வயது (46), அரியூர் நாடு என்ற இடத்தில் செல்வராஜ் வயது (45), அரியூர் நாடு, கிழக்கு வலவு என்ற இடத்தில் ஜெயக்குமார் வயது (43) ஆகியோரிடம் இருந்து 25 மதுபான பாட்டில்கள் கைப்பற்றி அவர்கள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்கள் ஏதும் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை காவல்துறையினர் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story