சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்க மாணவ மாணவியர் கூட்டு பிரார்த்தனை

சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்க   மாணவ மாணவியர் கூட்டு பிரார்த்தனை

சந்திராயன்-3

கடந்த ஜூலை 14 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து நிலவினை ஆய்வு மேற்கொள்ளும் வகையில் சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு அதன் சுற்றுப் பாதையை விண்கலம் வெற்றிகரமாக சென்றடைந்தது இதனை தொடர்ந்து சந்திராயன்-3 விண்கலம் நிலவில் ஆய்வு மேற்கொள்ள நாளை தரையிறங்க உள்ளது. இதனையடுத்து சந்திராயன்-3 விண்கலம் எந்தவித பிரச்சினையும் இன்றி நிலவில் தரையிறங்க வேண்டும் என நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் விஜயகுமார் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா பப்ளிக் பள்ளி சேர்ந்த சிறுவர்- சிறுமிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Tags

Next Story