நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்
போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
தற்பொழுது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் TET (Teacher Eligiblity Test) Paper 1 & Paper 2 விற்கான இலவச பயிற்சி வகுப்பு 21.08.2023 அன்று நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்கப்பட உள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான TET தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு வார நாட்களில் காலை 10.30 – 1.30 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயன் பெறலாம். இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 Passport size புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.
மேலும், http://tamilnaducareerservice.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொளி வழி கற்றல், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இவ்விணையதளத்தில் பாடக்குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.