ராசிபுரம் வனிதா கிளப் சார்பாக தேங்காய் சுடும் பண்டிகை

தேங்காய் சுடும் பண்டிகை பெண்கள் உற்சாக கொண்டாட்டம்: ராசிபுரம் வனிதா கிளப் சார்பாக சிறப்பாக கொண்டாடினர்..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆடி மாதம் முதல் நாளான தேங்காய் சுடும் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் இந்த பண்டிகையானது வெகு விமர்சையாக கிராமங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல் ஆடி அமாவாசை பிறந்த முதல் நாள் ஆடி ஒன்று பொதுமக்களும், சிறுவர், சிறுமிகளும், புதுமணத் தம்பதியினரும் தேங்காய் சுட்டு இந்த பண்டிகை உற்சாகமாக கொண்டாடினர்.

மேலும் இவர்களுடன் ராசிபுரம் வனிதா கிளப் சார்பாக நிர்வாகிகள் அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக இந்த தேங்காய் சுடும் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

முன்னதாக இளம் தேங்காய் ,அவல், பொட்டுகடலை, வெல்லம்,அரிசி பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்களை நிரப்பி தேங்காயின் ஒரு கண்ணில் அழிஞ்சி குச்சியை சொருகி தீயில் வாட்டி தேங்காயை சுட்டு மகிழ்ந்தனர்.

இவ்வாறு சுடப்பட்ட தேங்காய்கள் அந்தந்த பகுதியில் உள்ள விநாயகர் கோயில்களில் படைத்து வழிபட்டனர். தொடர்ந்து தீயில் சுட்ட தேங்காயை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்து குடும்பத்துடன் உண்டு தலையாடி பண்டிகையை கொண்டாடினர்.

Tags

Next Story