போலீசார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் கைது
லாரி ஓட்டுனர் கைது
குமாரபாளையம் போலீசார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் இளமுருகன் மற்றும் தலைமை காவலராக பணிபுரிபவர் மகேந்திரன். ஆக. 18, இரவு குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அங்குள்ள ஏ.டி.எம் மையத்தை ஆய்வு மேற்கொண்ட பிறகு, மீண்டும் அடுத்த பகுதிக்கு செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது, சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த கண்டைனர் லாரியின் ஓட்டுனர் தூக்கத்தின் காரணமாக முன்னாள் சென்று கொண்டிருந்த போலீசார் சென்ற டூவீலர் மீது மோதியதில், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய, கள்ளக்குறிச்சி மாவட்டம், இராவூர் பகுதியை சேர்ந்த முகேஷ், (30) என்பவர் கைது செய்யப்பட்டார்.