கே எஸ் ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா

கே எஸ் ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா

தொடக்க விழா 

கே.எஸ்.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விர்சுசா நிறுவனத்தின் மனிதவள துணைத் தலைவர் சந்திரசேகர் சென்னியப்பன், கே.எஸ்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ஜான் பிரபாகர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதில் சந்திரசேகர் சென்னியப்பன் அவர்கள் தன் வாழ்வின் வெற்றியின் இரகசியம் குறித்தும் அதன்வழி மாணவர்கள் கல்வியில் தன்னை சிறந்த ஆளுமை படைத்தவர்களாக மாற்றிக்கொள்ளத் தேவையான வழிமுறைகள் குறித்தும் சொற்பொழிவாற்றினார். ஜான் பிரபாகரன் மாணவர்கள் காண வேண்டிய கனவுகள் குறித்தும் கல்லூரி காலங்களில் அவர்கள் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினார். மேலும் கல்லூரியின் முதல்வர் முனைவர் எம்.வெங்கடேசன் கல்லூரி கடந்துவந்த பாதை குறித்தும் மாணவர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டமிடல் குறித்தும் விளக்கியுரைத்தார். இறுதியாக, பன்னிரெண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குக் கே.எஸ்.ஆர். கல்விநிறுவனம் ஊக்கத்தொகையாகக் கல்விக் கட்டணத்தில் சிறப்புச் சலுகை வழங்கி கௌரவித்தது. இதில் 600க்கும் மேற்பட்ட மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story