ஆம்பூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

ஆம்பூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

சமுதாய வளைகாப்பு


ஆம்பூரில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.. இந்நிகழ்ச்சியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

பின்னர் விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கர்ப்பிணி பெண்கள் முறையாக உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், இயற்கை முறையில் விளையும் தானியங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் பிரசவத்தின் போது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள் குங்குமம், மற்றும் புடவைகள் அடங்கிய வளைகாப்பு சீர்வரிசை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் 200 கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினர்.. பின்னர் விழாவில் ஏற்பாடு செய்யப்பட்ட அறுசுவை விருந்தில் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் உணவு அருந்தினர்..

Tags

Next Story