பேளுக்குறிச்சி G. H ல் கட்டிடம் கட்டும் பணி - இராஜேஸ்குமார் துவக்கம்

பேளுக்குறிச்சி G. H ல்  கட்டிடம் கட்டும் பணி - இராஜேஸ்குமார் துவக்கம்

இராஜேஸ்குமார் துவக்கம் 

சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் வட்டார அளவிலான பொது சுகாதார மைய கட்டிடம் கட்டும் பணிக்கு துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கே.பொன்னுசாமி

தலைமை தாங்கினார். அட்மா குழு தலைவர் அசோக்குமார் முன்னிலை வகித்தார்.

15 வது நிதி குழு மானியத்தின் திட்டத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படும் வட்டார அளவிலான பொது சுகாதார மைய கட்டிடம் கட்டும் பணியை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் துவக்கி வைத்தார்.

விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வடிவேல், டாக்டர் கண்ணன், யூனியன் சேர்மன் மணிமாலா, பஞ்சாயத்து தலைவர் செல்வம், அபி மன்னன், மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் ஆனந்த்பாபு, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன், இளைஞர் அணி நிர்வாகிகள் சூர்யா, கோபிநாத், டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் ரகு மற்றும் நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story