வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்

வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான  ஆலோசனைக் கூட்டம்

மாவட்ட ஆட்சியர் ச.உமா

மாவட்ட ஆட்சியர் ச.உமா பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்துதல்,

கட்டிட மாற்றம், அமைவிட மாற்றம், பெயர் மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்துதல், கட்டிட மாற்றம், அமைவிட மாற்றம், பெயர் மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் நடைபெற்றது.

இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற மன்ற தொகுதிகளிலும் மொத்தமுள்ள 1627 வாக்குச் சாவடிகளில் 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை பிரித்து புதிய வாக்குச் சாவடிகள் அமைத்திடவும்,

2 கி.மீட்டருக்கு மேல் தொலைவில் உள்ள வாக்குச்சாவடிகளை அருகிலுள்ள வேறு இடத்திற்கு மாற்றவும், வாக்குச்சாவடி பெயர் மாற்றம் போன்ற மாறுதல்கள் குறித்தும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்பேரில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 23 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றம் (Building Changes), அமைவிட மாற்றம (Location Changes) மற்றும் ஆகியவற்றிற்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும் நாமக்கல் நகராட்சியில் சில வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்த கோரிக்கை வரப்பெற்று அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது), வருவாய் கோட்டாட்சியரகள் நாமக்கல், திருச்செங்கோடு அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story