சாலை ஆக்கிரமிப்பால் தொடரும் போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்து நெரிசல்
குமாரபாளையத்தில் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
குமாரபாளையம் இடைப்பாடி சாலையில் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. அதிக போக்குவரத்து உள்ள இந்த சாலையில், சாலையின் அகலம் சுமார் 15 அடி என்ற அளவில் உள்ளது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி பஸ்கள் வரும் நேரம், மாலையில் இதே போல் வேலை முடிந்து யாவரும் வீட்டிற்கு திரும்பும் நேரம் உள்ளிட்ட பல சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சாலை நெடுக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்படுகிறது. வாரச்சந்தை கூடும் வெள்ளிக்கிழமை நாளன்று காலை முதல், இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இடைப்பாடி செல்லும் பேருந்துகள், பவானி பஸ் ஸ்டாண்ட் செல்லும் பேருந்துகள் உரிய நேரத்தில் செல்ல வழியில்லாமல் பயணிகள் தவிக்கும் நிலைக்கு ஆளாகி வருகிறார்கள். போக்குவரத்துக்கு நெரிசலால் பலர் விபத்துக்குள்ளானதில் பல குடும்பத்தினர் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். ஆக்கிரமிப்புகள் அகற்றி போக்குவரத்து எளிமையாக்கிடவும், விபத்து அபாயத்திலிருந்து பொதுமக்களை காக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.