விநாயகர் சதுர்த்திக்கு பக்தர்கள் விரதம் இறைச்சி கடைகள் வெறிச்சோடியது

இறைச்சி கடைகள் வெறிச்சோடியது
திருவிழா விரதமிருக்கும் பக்தர்கள் வெறிச்சோடிய இறைச்சி கடைகள் குமாரபாளையத்தில் பெரும்பாலான பக்தர்கள் விநாயகர் சதுர்த்தி திருவிழா விரதமிருந்து வருவதால் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பக்தர்கள் விரதமிருந்து வருகிறார்கள். இதனால் குமாரபாளையம் பகுதியில் ஆட்டிறைச்சி, கோழி, மீன் கடைகளில் வாங்க ஆளில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இது குறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி விழா தமிழகத்தில் சில ஆண்டுகளாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறைந்த பட்சம் விநாயகர் கொலு மூன்று நாட்கள் வைப்பார்கள். அதனால் பக்தர்கள் சில நாட்களுக்கு முன்பே விரதமிருந்து வருவதால், இறைச்சி கடைகளில் கூட்டம் இல்லாத நிலை ஏற்பட்டது. மேலும் ஆவணி மாதம் கடைசி முகூர்த்தம் என்பதாலும், பெரும்பாலான பொதுமக்கள் திருமண விஷேசங்களுக்கு சென்று விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
