திருச்செங்கோட்டில் தினமலர் பத்திரிக்கையை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்

திருச்செங்கோட்டில் தினமலர் பத்திரிக்கையை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்
X

நகல் எரிப்பு போராட்டம்

தமிழக முதல்வரின் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிகையை கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவினர் திருச்செங்கோட்டில் தினமலர் பேப்பரை எரித்து திமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் கிராமப்புறங்களில் இருந்து வரும் போது காலை உணவு உண்ண முடியாமல் வேக வேகமாக உண்டு விட்டு பள்ளிக்கு வருவதால் அவர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 32 ஆயிரம் பள்ளிகள் 17 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் இருந்து தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் நேற்று வெளிவந்த தினமலர் பத்திரிக்கையில் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தால் பள்ளிகளில் கக்கூசுகள் நிரம்புகின்றன என தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தனர், இதனை கண்டிக்கும் வகையில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவினர் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே தினமலர் பத்திரிகை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மல்லை ஜெகதீஷ் குமார், சுந்தர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட ஓட்டுனர் அணி அமைப்பாளர் ராஜவேல், திமுக சமூக வலைதள பொறுப்பாளர் ஒன்றிய குழு உறுப்பினர் திருநங்கை ரியா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் கௌதம், கருணாகரன்

உள்ளிட்ட திமுகவினர் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர், தொடர்ந்து தினமலர் பத்திரிகையை தீ வைத்து கொளுத்தினர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜவேல்,

மாநில மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் ரியா, ஆகியோர் கூறியதாவது, ஏழை குழந்தைகளின் பசிப்பிணி போக்க தமிழக முதல்வரின் எண்ணத்தில் உதயமான காலை உணவு திட்டத்தின் மூலம் ஏழை குழந்தைகள் பயன்பெற்று வரும் நிலையில் அதனை கொச்சைப்படுத்தும் விதமாக பாசிச மனப்பான்மை கொண்ட தினமலர் பத்திரிக்கை வன்மத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது இதனை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் இனிமேல் எந்த திமுகவினரும் தினமலர் பத்திரிக்கையை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என கூறினர்.

Tags

Next Story