அதிருப்தியில் அ.தி.மு.க.வில் இணைந்த ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர்

அதிருப்தியில் அ.தி.மு.க.வில் இணைந்த ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர்

 அ.தி.மு.க.வில் இணைந்த ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர்

குமாரபாளையம் அருகே ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் கட்சி அதிருப்தியில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி, ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் தனசேகரன், தி.மு.க. கட்சியில் அதிருப்தியின் காரணமாக முன்னாள் முதல்வர் இடைப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். இது குறித்து தனசேகரன் கூறியதாவது:

தி.மு.க. கட்சியில் உரிய மரியாதை இல்லை. ஒன்றிய நிர்வாகிகள் நியமனம் செய்ய போது, தகுதி இல்லாத நபர்களுக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் நான் அ.தி.மு.க.வில் இணைந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

இவருடன் குமாரபாளையம் நகராட்சி பெண் கவுன்சிலர்கள் நந்தினிதேவி, வள்ளியம்மாள், ரேவதி ஆகியோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story