மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்புச் சங்க பொதுக்குழு கூட்டம்
மருத்துவர் ச.உமா பங்கேற்பு
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்புச் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். சங்க நிர்வாக செயலாளர் / நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்புச் சங்க பொருளாளர் சமர்பித்த 20222-23 ஆம் ஆண்டின் வரவு-செலவு கணக்கிற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறுதல், மேற்படி வரவு - செலவு கணக்கினை தணிக்கை செய்ய ஒப்புதல் பெறுதல், 22 செயற்குழு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர், சங்கம் புதுப்பிக்க 20223 ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்குகள், உறுதிமொழி, தேர்தல், செயற்குழு உறுப்பினர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பட்டியில் ஆகியவை சேர்த்து சங்க நிர்வாக செயலாளர், மாவட்ட சங்கங்களின் பதிவு அலுவலகத்தில் தாக்கல் செய்து கோர்வைக்கான கட்டணம் சங்க நிதியில் இருந்து கட்டணம் செலுத்தி அதற்கான ரசீது பெற்றுக் கொள்ள ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் இராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ரெ.சுமன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பொறுப்பு மரு.நடராஜன், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல்வர் மருத்துவர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன் மற்றும் பிராணிகள் வதைத் தடுப்புச் சங்க செயற்குழு உறுப்பினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.